தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தம் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல : முன்னாள் தவிசாளர் சுட்டிக்காட்டு

Sri Lankan Tamils Jaffna P Ariyanethran Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Sathangani Sep 11, 2024 06:52 AM GMT
Report

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியமையானது எந்தவொரு சிங்களப் பிரஜைக்கும் எதிரானது அல்ல என ரெலோவின் (TELO) தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் (Thiagaraja Nirosh) தெரிவித்துள்ளார்.

நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதற்காக நாட்டின் தேசிய இனமான தமிழ் இனம் இன உரிமைகளை விற்று வாழ முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து நேற்று (10) வடமராட்சி மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொது வேட்பாளருக்கு ஆதரவாக யாழ்.வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட பரப்புரை கூட்டம்

பொது வேட்பாளருக்கு ஆதரவாக யாழ்.வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட பரப்புரை கூட்டம்

அரசியல் அபிலாசைகள்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழ்த் தேசியம் இன்று பலவாறாக அகத் துண்டாலுக்கு உட்பட்டு வருகின்றது. இது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகிற்கும் ஆட்சியில் அமர்பவர்களுடன் பேசுவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கான நிலைமைகளை பலமிழக்கச் செய்து விடுமோ என்ற நியாயபூர்வமான அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அவ் அச்சத்தில் நியாயபூர்வமான யதார்த்தம் உள்ளது. தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இனமான நாம் எமது அரசியல் அபிலாசைகளை சாதாரண ஜனநாயக உரிமைகளுடன் மட்டும் மட்டுப்படுத்திவிடமுடியாது.

தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தம் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல : முன்னாள் தவிசாளர் சுட்டிக்காட்டு | Tamil General Candidate Is Not Against Sinhalese

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தளவு தூரம் ஆட்சியில் அமரக்கூடிய ஒருவருக்கு ஆதரவு அளிக்கலாம் என்று சிலர் அல்லும் பகலும் அறைபோட்டு சிந்திக்கின்றனர் செயற்படுகின்றனர்.

அவர்கள் இந்த நாட்டில் வெல்லக்கூடிய ஒருவரை தேடிப்பிடித்து சலுகைகளைப் பெற்று சகித்து வாழுவோம் என்ற என்ற மனநிலையில் இனத்தினை அடமானம் வைக்கின்றனர்.

நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையான எண்ணிக்கையில் வாழ்கின்றனர் என்பதற்காக எண்ணிக்கையில் குறைந்த அளவுடைய நாட்டின் தேசிய இனமான தமிழ் இனம் இன உரிமைகளை விற்று வாழ முடியாது.

யாழில் சஜித்திற்கு ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பிரசாரம்

யாழில் சஜித்திற்கு ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பிரசாரம்

தமிழ் மக்களின் பிரச்சினைகள்

சிங்கள பேரினவாதிகளுக்கு நோகக்கூடாது என்று வாழ்பவர்கள் எம்மிடத்தில் அதிகரித்துவிட்டனர். மக்களின் இட்சியத்தினையும் தியாகத்தினையும் விற்றுப்பிழைப்பதில் முன்டியடிக்கின்றனர்.

தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தம் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல : முன்னாள் தவிசாளர் சுட்டிக்காட்டு | Tamil General Candidate Is Not Against Sinhalese

மண்ணுக்காக எத்தனையோ தியாகங்களை எம் இனம் மேற்கொண்டிருக்கின்றது. அடிப்படையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதை வலியுறுத்தியும் எமக்கு சமஸ்டி அடிப்படையிலான உலகம் ஏற்றுக் கொண்ட அரசியல் தீர்வினை முன்வைக்கக் கோரியும் நாம் பொது வேட்பாளரை முன்நிறுத்திச் செயற்படுவது நியாயபூர்வமாகச் சிந்திக்கும் எந்தவொரு சிங்களப் பிரஜைக்கும் எதிரான வேலைத்திட்டம் கிடையாது.

சிங்கள முற்போக்கு சக்திகளும் சொந்த தாய் நாட்டில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் தமிழ் மக்களின் கருத்து வெளிபாட்டு உரிமைக்கும் ஜனநாயக உரிமைக்கும் மதிப்பளித்து வாக்களிக்க முடியும்.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் எமது அரசியல் அபிலாசைகளை தொடர்ந்தும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இன்றுள்ள நிலையில் ஒருமித்து தமிழ் பொது வேட்பாளரின் சின்னமான சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கடமையினை நிறைவேற்றுவோம்“ என தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

இறுதி முடிவு தொடர்பில் வெளியாகவுள்ள அறிக்கை : மாவை சேனாதிராஜா வெளியிட்ட அறிவிப்பு

இறுதி முடிவு தொடர்பில் வெளியாகவுள்ள அறிக்கை : மாவை சேனாதிராஜா வெளியிட்ட அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019