முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: பிரித்தானிய எம்.பி வெளியிட்ட அறிக்கை
முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக, அமைதிக்காக, பொறுப்புக் கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் (Uma Kumaran) தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு செய்தியில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தின் போது நாங்கள் இலங்கையின் யுத்தத்தின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் நினைவுகளை கௌரவிக்கின்றோம்.
16 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை. காயமும் மன அதிர்ச்சியும் எங்களின் கூட்டு நினைவுகளில் ஆழமாக உணரப்படுகின்றது, குடும்பங்கள் இன்னமும் நீதியை கோரிநிற்கின்றன, உயிர்பிழைத்தவர்கள் இழப்பின் பெரும் வலியை இன்னமும் சுமக்கின்றனர்.
மேலும் எங்களின் உலகளாவிய புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். மே 18 என்பது எங்கள் அனைவருக்கும் ஆறாத காயங்கள் நீதிக்கான கதறல் ஆகியவற்றின் வலிமிகுந்த நினைவுபடுத்தல்.
தமிழ் பாரம்பரியத்தை உடைய பிரித்தானியாவின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், பிரித்தானிய சமூகத்திற்கான எனது பங்களிப்பு குறித்த பெருமிதத்தை மாத்திரம் நான் சுமக்கவில்லை, உண்மைக்காக பொறுப்புக்கூறலிற்காக மனித உரிமைகளிற்காக குரல் கொடுக்கவேண்டிய பொறுப்பையும் நான் சுமக்கின்றேன்.
முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டவர்களிற்கான நீதி என்ற விடயம் தமிழர் விவகாரம் இல்லை மனிதாபிமான விவகாரம். நாங்கள் உயிர்பிழைத்தவர்களின் குரல்களிற்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கவேண்டும், அவர்களின் குரல்கள் மௌனமாக்கப்படாததை உறுதி செய்யவேண்டும்.
My statement for May 18th Tamil Genocide Remembrance day:
— Uma Kumaran MP (@Uma_Kumaran) May 18, 2025
16 years on, we honour and remember the tens of thousands of Tamils who were massacred in Mullivaikkal
Our collective call for justice echoes in every corner of the world, today and always pic.twitter.com/GXYD13oFqo
இலங்கையில் நிரந்தர அமைதி சமாதானம் நல்லிணக்கத்திற்காக நாங்கள் தொடர்ந்தும் பாடுபடவேண்டும். நீதிக்கான பாதை கடினமானதாக வலிமிகுந்ததாக காணப்படுகின்ற போதிலும், உலக நாடுகளிலும் பிரித்தானியாவிலும் காணப்படுகின்ற எங்கள் மக்களின் வலிமை மற்றும் மீள் எழும் தன்மை, நம்பிக்கை நீடிப்பதை வெளிப்படுத்துகின்றது.
பிரித்தானிய அரசாங்கம் விதித்த தடை
கடந்து செல்லும் ஒவ்வொரு வருடமும் உண்மைக்கான குரல் மேலும் வலுவடைகின்றது, பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோள் மேலும் வலுவடைகின்றது.
பிரித்தானியால் தொழில்கட்சி அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவதை நோக்கி குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த வருடம் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முக்கிய தனிநபர்களிற்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்தது.
தடைகள் ஒரு முக்கியமான திருப்புமுனையை குறிக்கின்றன, நீதி என்பது ஒரு தெரிவல்ல அவசியமான விடயம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளது போல, கடந்த கால மனித உரிமை மீறல்களை எதிர்கொள்வது, நிரந்தர அமைதி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அவசியமானதாகும்.
மேலும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது என்ற வலுவான செய்தியையும் இது தெரிவித்துள்ளது.
நாங்கள் எப்போதும் கடந்தகாலத்தை கௌரவிப்போம் ஆனால் எதிர்காலத்தை நாங்கள் நம்பிக்கையுடன் நோக்கவேண்டும், நீதிநிலவும் எதிர்காலம், உயிர்பிழைத்தவர்களின் குரல்கள் செவிமடுக்கப்படும் எதிர்காலம், நல்லிணக்கம் காயங்களை ஆற்றுவதற்கு வழிசமைக்கும் எதிர்காலம்.
எதிர்கால தலைமுறைகள் ஒருபோதும் மறக்காத ஆனால் ,வரலாறு ஏற்றுக்கொள்ளப்படும் கௌரவம் மதிக்கப்படும் அவர்களுடைய உரிமைகள் நிலைநாட்டப்படும் உலகில் வாழும் எதிர்காலம்.
இன்று இந்த நாளை நினைவுகூரும் அனைவருக்கும் - நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் நினைவுகூருகின்றோம், நாங்கள் துயருகின்றோம், துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம்.
எங்கள் ஐக்கியம், விடாமுயற்சி, எங்கள் கூட்டு குரல்கள் நாங்கள் முன்னோக்கி செல்லும் நிலையை ஏற்படுத்தும். நாங்கள் இணைந்து இழக்கப்பட்டவர்களின் நினைவுகளை நினைவுகளை கௌரவிக்கும் எதிர்காலத்தை உருவாக்குவோம், மீண்டும் அந்த கொடுமைகள் நிகழாமலிருப்பதை உறுதி செய்வோம்.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
