வனத்துறையின் அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: குகதாசன் கடும் கண்டனம்

Anura Kumara Dissanayaka European Parliament Kathiravelu Shanmugam Kugathasan
By Independent Writer May 22, 2025 10:06 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

வனத்துறை அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K.S.Kugathasan) தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (22) சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் சம்பூர் கிராம சேவையாளர் பிரிவில் 40 விவசாயிகளுக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தையும் கிளிவெட்டி கிராம சேவகர் பிரிவில் 37 விவசாயிகளுக்கு சொந்தமான 85 ஏக்கர் நிலத்தையும் பாரதிபுரம் கிராம சேவகர் பிரிவில் 45 விவசாயிகளுக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலத்தையும், ஆசாத்நகர் கிராம சேவகர் பிரிவில் 70 விவசாயிகளுக்கு சொந்தமான 148 ஏக்கர் நிலத்தையும் தோப்பூர் கிராம சேவையாளர் பிரிவில் 60 விவசாயிகளுக்கு சொந்தமான 93 ஏக்கர் நிலத்தையும் என ஆக மொத்தம் 252 விவசாயிகளுக்கு சொந்தமான 693 ஏக்கர் நிலத்தை வனத்துறையானது தனது எல்லைக் கற்களை இட்டு பிடித்து வருவதோடு விவசாயிகளை விவசாயம் செய்ய விடாமல் தடுத்தும் வருகின்றது.

அர்ச்சுனாவுடன் ஆளும் கட்சி கடும் முறுகல்: சபையில் கொந்தளிப்பு

அர்ச்சுனாவுடன் ஆளும் கட்சி கடும் முறுகல்: சபையில் கொந்தளிப்பு

பரம்பரை பரம்பரையாக விவசாயம்

இதைப் போலவே சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் தங்கநகர் கிராம சேவையாளர் பிரிவிலும் 85 விவசாயிகளுக்கு சொந்தமான 145 ஏக்கர் நிலத்தை எல்லைக் கற்களை போட்டு பிடித்துள்ளது.


வனத்துறையின் இந்த செயற்பாட்டை உடன் நிறுத்த ஆவன செய்யுமாறு துறைசார் அமைச்சரைக் கேட்டுகொள்கிறேன். திருகோணமலை மாவட்டத்தில் நில வன்கவர்வு என்பது இப்பொழுது தோன்றிய பிரச்சனை அல்ல.

1983 ஆண்டு தொடக்கம் 2009 ஆண்டு வரை போர் நிலவிய காலத்தில் மக்கள் இடம் பெயர்ந்தனர். அவ்வேளையில் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவந்த நிலங்களை வனத்துறையும் ,வனவிலங்குத் துறையும் எல்லைக் கற்களை போட்டு பிடித்து வைத்துள்ளார்கள்.

மக்கள் கேலி செய்கின்றனர்

எடுத்துக்கட்டாக திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் போர் காலத்திலே கைவிடப்பட்ட 205 சிறுகுளங்களையும் 25 அணைக் கட்டுகளையும் கொண்டமைந்த அண்ணளவாக 12000 ஏக்கர் நிலத்தை வனத்துறை எல்லைக் கற்களை போட்டு பிடித்து வைத்துள்ளது . இதன் மூலம் 24,000 மெற்றிக் தொன் நெல் உற்பத்தி இல்லாமல் போயுள்ளது.

வனத்துறையின் அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: குகதாசன் கடும் கண்டனம் | Tamil Mp Lands Grabbed By Sri Lankas Forest Dept

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் பரப்பளவு 32,042 ஏக்கர் ஆகும். இதில் வனவிலங்குத் துறை 25,242 ஏக்கர் நிலத்தை தமக்கு உரியது எனவும் வனத் துறை 11,906 ஏக்கர் நிலத்தை தமக்கு உரியது எனவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

மொத்தம் 32,042 ஏக்கர் பரப்பளவு நிலத்தை கொண்ட வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் எப்படி 37,148 ஏக்கர் நிலத்தை கைபற்றினார்கள்? இப்படியான திறமை இந்த நாட்டில் உள்ள வனத்துறை மற்றும் வனவிலங்குத் துறை அதிகாரிகளைத் தவிர உலகில் வேறு யாருக்கும் இருக்க முடியாது என மக்கள் கேலி செய்கின்றனர்.

சயனைட் கட்டிக்கொண்டு போராடிய ஒரு இனம்: சபையில் ரிசார்ட் எம்.பி ஆவேசம்

சயனைட் கட்டிக்கொண்டு போராடிய ஒரு இனம்: சபையில் ரிசார்ட் எம்.பி ஆவேசம்

பூசாரி விடை கொடுக்க மாட்டார்

அதேபோன்று திருகோணமலை மாவட்டதில் உள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 29,430 ஏக்கர் நிலத்தை வனத்துறை கையகப்படுத்தி வைத்துள்ளது, மேலும் 28,372 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முனைகிறது. வனவிலங்குத் துறை 7,330 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது, தொல்பொருள் துறை 1,087 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது, புத்த பிக்குகள் பூஜா பூமி என்ற பெயரில் 3,820 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர்.

வனத்துறையின் அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: குகதாசன் கடும் கண்டனம் | Tamil Mp Lands Grabbed By Sri Lankas Forest Dept

இதன் மூலம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த 70,039 ஏக்கர் நிலம் நெல் உற்பத்தி செய்யாமல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு போகத்தில் 140,000 மெற்றிக் தொன் நெல் உற்பத்தி குறைக்கப்படுகின்றது.

மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களது ஆட்சிக்காலத்தின் பொழுது 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் நெற் செய்கைக்குப் பயன்படுத்திய நிலங்களை நெற்செய்கைக்கு விடுவிக்கும்படி அரச ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் இது வரையில் குறித்த ஆணை முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. “ ஆசாரி விடை கொடுத்தாலும் பூசாரி விடை கொடுக்க மாட்டார்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

அதேபோல அரசாங்கம் முடிவு செய்தாலும் அரச அதிகாரிகள் அதனைச் செயற்படுத்துவதாக இல்லை. இதன் மூலம் இவர்கள் நாட்டின் நெல் உற்பத்தியை அதிகரிக்க விடாமல் தடுத்து அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனரா? என எண்ணத் தோன்றுகிறது. இதனை அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதேபோல தொல்பொருள் துறையும் மக்கள் விவசாயம் செய்த நிலங்களை தமது எல்லைக் கற்களைப் போட்டுப் பிடித்து வைத்துக்கொண்டு, அதனுள் தொல்பொருள் சின்னங்களைக் கண்டுபிடிக்க முடியாமலும் அதேவேளை அதனுள் மக்களை விவசாயம் செய்ய விடாமலும் தடுத்து வருகின்றது.

நெல் உற்பத்தி கடுமையாகப் பாதிப்பு

எடுத்துக் காட்டாகத் திரியாய் கிராமத்தில் உள்ள ஏறத்தாள ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தினைக் கையகப்படுத்தி எல்லைக் கற்களை போட்டு மூன்று/நான்கு ஆண்டுகளாக பிடித்து வைத்துள்ளனர் எனினும் அப் பகுதியில் எதுவித தொல்பொருள் சின்னங்களையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுடன் அந்த நிலத்தை மீள மக்களுக்கு விவசாயம் செய்ய வழங்கவும் மனம் இன்றி இருக்கின்றனர்.

வனத்துறையின் அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: குகதாசன் கடும் கண்டனம் | Tamil Mp Lands Grabbed By Sri Lankas Forest Dept

இதனால் நெல் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது. முடிவாக திருகோணமலை மாவட்டத்திலே 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த 118,710 ஏக்கர் நிலத்தை வனத் துறையினரும் 111,619 ஏக்கர் நிலத்தை வன விலங்குத் துறையினரும் 2,599 ஏக்கர் நிலத்தை தொல் பொருள் துறையினரும் பூஜா பூமி, பூஜாக் கொடை என்னும் பெயர்களில் ஏறத்தாழ 3,820 ஏக்கர் நிலத்தை புத்த பிக்குமாரும் ஆக மொத்தம் மக்கள் விவசாயம் செய்த 236,748 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.

இதன் மூலம் ஒரு போகத்தில் மட்டும் ஏறத்தாழ ஐந்து இலட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி இல்லாமல் போகின்றது. இதை இந்த அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இதனை விடுவிப்பதன் மூலம் ஐந்து இலட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தியை அதிகரிக்க ஆவன செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

பொருளாதார இழப்பிற்கும் பொறுப்பு

இதேபோல வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் முதன்மையான சிக்கலாக மேய்ச்சல் தரைப் பிரச்சனை காணப்படுகின்றது, வனவிலங்குத் துறையானது மரபு வழியாகக் கால்நடை வளர்ப்பாளர் பயன்படுத்தி வந்த அங்கோடை, மாவிலாறு பகுதி உள்ளிட்ட மேய்ச்சல் தரைகளைப் பிடித்து வைத்துக்கொண்டு, இந்த இடத்தில் காட்டுவிலங்குகள் மட்டும் மேயலாம் ஆனால் வீட்டு விலங்குகள் மேயமுடியாது என தடுத்து வருகின்றது.

வனத்துறையின் அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: குகதாசன் கடும் கண்டனம் | Tamil Mp Lands Grabbed By Sri Lankas Forest Dept

2008 ஆம் ஆண்டில் 600 கால்நடை வளர்ப்பாளர்களும் 28,000 கால்நடைகளும் வெருகல் கோட்டத்தில் காணப்பட்ட வேளையில், போதிய உணவு இன்றி நோயினால் பாதிக்கப்பட்டு சில ஆயிரம் கால்நடைகள் இன்று இறந்து போயுள்ள சூழலில், இப்பொழுது 15,200 கால்நடைகள் மட்டுமே எஞ்சி உள்ளன.

கால்நடைகளின் இழப்பிற்கும், கால்நடை வளர்ப்பாளர்களின் பொருளாதார இழப்பிற்கும் பொறுப்பு கூறுவது யார் ? இத்தகைய சிக்கல் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகமம், கிண்ணியா,குச்சவெளி,மொறவெவ முதலிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ளன என்பது குறிப்பிட தக்கது.

எனவே கமத்தொழில்,கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மேற்கூறிய விடயங்களை கவனத்தில் எடுத்து 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு விவசாயிகள் பயிர் செய்த நிலங்களையும், நீர் நிலைகள் அமைந்துள்ள நிலங்களையும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையையும் விரைவாக விடுவித்து நீர்ப்பாசனத் திட்டங்களைச் சீர்செய்து நாட்டின் நெல் உற்பத்தியையும் கால்நடைகளின் வளத்தையும் பெருக்க ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு எனது உரையை நிறைவு செய்கின்றேன். 

நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி அநுரவின் தெரிவு!

நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி அநுரவின் தெரிவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025