இலங்கை கடற்பரப்பி்ல் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்: உடன் விடுவிக்க நடவடிக்கை
இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குரிய தூதரக நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 13ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்த முதலமைச்சர், இது ஒரே வாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது சம்பவம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீனவர்களின் வாழ்வாதாரம்
இந்தக் கைதுகளினால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் மீனவ கிராமங்களில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கூறிய மீனவர்கள் தவிர, 137 படகுகளும், 39 மீனவர்களும் இன்னும் இலங்கை வசம் இருப்பதாக, முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |