இலங்கையில் தமிழ்த் தேசியச் சிந்தனை

Sri Lankan Tamils Sri Lanka United Kingdom ITAK
By Sathangani Feb 10, 2024 06:05 AM GMT
Report
Courtesy: சு.பிரஜீவன்ராம்

அண்மையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவின்போது பிரதான பேசுபொருளாக தமிழ்த்தேசியம், தமிழ்த் தேசிய நீக்க அரசியல் என்ற சொல்லாடல்கள் அநேகரால் முணுமுணுக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக தமிழரசுக் கட்சி உறுப்பினராக இருந்து கொண்டே சுமந்திரன் தமிழ்த்தேசிய நீக்க அரசியலை மேற்கொண்டு வந்தார் என குற்றம்சாட்டப்பட்டது. இக் குற்றச்சாட்டை சாதாரண பொதுமக்களோ அல்லது கட்சி அடிமட்ட உறுப்பினர்களோ முன்வைக்கவில்லை.

தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் மூவரில் ஒருவராகக் களத்தில் குதித்தவருமான சீ.யோகேஸ்வரன் சுமந்திரன் மீது இத்தகைய பாரதூரமான விமர்சனமொன்றை பகிரங்கமாக முன்வைத்தபோது, அது பற்றியெரியும் விவகாரமாக மாறியது.

இந்த நிலையில், தமிழ்த் தேசியம் என்றால் என்ன? உண்மையில் தமிழ்த் தேசிய நீக்கத்தை சுமந்திரன் செய்தாரா அல்லது அவ்வாறாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதா? தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசியப் பயணம் எவ்வாறாக அமைந்தது? இனிமேல் எவ்விதம் அமையவேண்டும் என்ற ஒரு சிறு அலசலாக இந்தத் தொடர் அமையவுள்ளது.

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்! தொடரும் விசாரணை

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்! தொடரும் விசாரணை


தமிழ்த்தேசியம் என்றால் என்ன?

ஜே.கால்ரன், ஜே.ஹாசின்சன் போன்ற அறிஞர்களின் ’தேசியம்’ என்பதற்கான வரைவிலக்கணத்தில் இருந்தே ‘தமிழ்த் தேசியம்’ என்ற கருத்தும் பிறப்பெடுத்தது.

அதனடிப்படையில் தெற்காசியாவில் தனித்துவமான பாராம்பரிய வரலாற்றை கொண்ட தமிழ்மக்கள் ஏனைய இன மக்களின் அடக்கு முறைகளில் இருந்து விடுபட்டு தமது அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காவும் இனத்தின் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும், தமது கலாசாரப் பாரம்பரியங்களை மீள் கட்டமைப்புச் செய்து எதிர்கால சந்ததியினருக்கு ஊடுகடத்துவதை நோக்கமாக கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் இயல்பாக உருவான உணர்வையே ‘தமிழ்த் தேசியம்’ என்பதாக வரையறுக்க முடியும்.

இலங்கையில் தமிழ்த் தேசியச் சிந்தனை | Tamil National Thought In Sri Lanka

தமிழ்த்தேசியச் சிந்தனை என்பது தமிழ் இனத்தின் நலனை முதன்மை நோக்காகக் கொண்டது. இங்கு ஒரு குறித்த சிலரை அல்லது குழுவை மட்டும் தமிழ்த்தேசியவாதிகள் எனக் கூறிவிட முடியாது. தமிழனாக பிறந்தவர் அனைவருமே தமிழ்த்தேசிய உணர்வுக்கு உரித்துடையவர்கள்.

‘எனக்கு மட்டுமே தமிழ்த்தேசிய உணர்வு உரித்தானது’ என்றோ ‘உங்களுக்கு தமிழ்த் தேசியத்தைப் பின்பற்ற அருகதை கிடையாது’ என்றோ எவருமே தனியுரிமை கொண்டாட முடியாது. ஆனால் யதார்த்தம் அவ்வாறில்லை.

ஒரு சில கட்சிகள், அமைப்புகள், தனிநபர்கள் என்போர் தாமே தமிழ்த் தேசியத்தின் ஏகபோக உரிமையாளர்கள் என்பதாகவே நடந்துகொள்கிறார்கள். தம்மைத் தூய தமிழ்த் தேசியவாதிகளாகப் பிரகடனப்படுத்தும் இத்தகையவர்கள், தமக்கு எதிரானோரை மிக எளிதாக ‘ தமிழ்த் தேசிய விரோதிகள், துரோகிகள்’ என்ற அடையாளப்படுத்தி, அவர்களின் குரலை இல்லாமல் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர்.

நான்கு நாட்களுக்கு மூடப்படுகிறது களனிப் பால வீதி!

நான்கு நாட்களுக்கு மூடப்படுகிறது களனிப் பால வீதி!


இலங்கையில் தமிழ்த் தேசியம்

ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ்த்தேசிய உணர்வுக்கான விதை என்பது பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்ட கோல்புறூக் கமரன் அரசியல் சீர்திருத்தத்தில் இடப்பட்டுவிட்டது எனலாம்.

நெருப்பில்லாமல் புகையாது என்பது போல பிரிததானியர் காலத்திற்கு முன்னரே இத்தீவில் வாழ்ந்த மக்கள் மனதில் இன உணர்வே மேல் எழுந்து காணப்பட்டது. இதை பண்டைய வரலாறுகளில் இருந்து எம்மால் அறிந்து கொள்ள முடியும்.

இலங்கையில் தமிழ்த் தேசியச் சிந்தனை | Tamil National Thought In Sri Lanka

கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இத்தீவில் கண்டிச்சிங்களவர், கரையோரச் சிங்களவர், தமிழர் என்ற மூன்று இன குழுவினர் வாழ்ந்த போதும் இவர்கள் எவருமே ஒன்றிணைந்து வாழும் போக்கினை கொண்டிருக்கவில்லை. மொழியாலும் மதத்தாலும் சாதிய கட்டமைப்பினாலும் பழக்கவழக்கத்தினாலும் வேறுபட்டுக்காணப்படனர்.

இப்படித் தனித்துவமாக இருந்த இம் மூன்று இனக் குழுவினரையும் ஒன்றிணைத்து ஒர் நிர்வாக கட்டமைப்புக்குள் பிரித்தானியர் உட்புகுத்தினர். இதன் மூலம் இலங்கையில் முடி ஆட்சிமுறை முற்றாக ஒழிக்கபட்டது.

ஜனநாயக ஆட்சிகான அடித்தளம் பிரித்தானியரால் இடப்பட்டது. அந்தவகையில் இலங்கையின் ஜனநாயக ஆட்சிக்கு அடித்தளமாக அமைந்த முதலாவது அரசியல் சீர்திருத்தமான கோல்புறுக் கமரன் அரசியல் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோல்புறுக் கமரன் அரசியல் சீர்திருத்தத்தின் சிறப்பம்சமாக கருதப்பட்ட இனவாரி பிரதிநிதித்துவ முறை, புகை நிலையில் இருந்த இலங்கை மக்களின் இன உணர்வில் மெல்ல மெல்ல தீ பற்ற காரணமாக அமைந்தது. பற்ற வைத்த தீயை பிரதேசவாத பிரிதிநிதித்துவ முறை மூலம் அனைக்கின்றோம் என பிரிதியானியர் கூறினாலும் யதார்த்தில் பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறை என்பது இலங்கை மக்களின் இன உணர்வுக்கு எண்ணெய் ஊற்றும் பணியையே செய்தது என்பதை கடந்தகால வரலாறு எமக்கு உணர்த்துகின்றது.

சீனாவிற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா..! நகர மறுக்கும் சீனக் கப்பல்

சீனாவிற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா..! நகர மறுக்கும் சீனக் கப்பல்


தேசியவாதத்தைத் தின்ற இனப்பற்று

இவ்வாறாக இன உணர்வின் வெளிப்பாட்டால் இலங்கை மக்கள் மத்தியில் இலங்கை தேசியவாத உணர்வு எழுச்சி பெறுவதற்கு பதிலாக இனப்பற்று எழுச்சியடைந்தது. இந்த இன எழுச்சியினை சிங்களத் தலைமைகள் சரியாக பயன்படுத்தி கொண்டு சிங்கள தேசியவாத உணர்வை பலமாக கட்டமைத்துக் கொண்டனர்.

குறிப்பாக இந்தக் காலத்தில் சிங்கள மகாசபையானது கண்டிச்சிங்களவர், கரையோரச் சிங்களவர் என பிளவுபட்டிருந்த சிங்கள மக்களை நாம் சிங்களவர் என்ற சிங்கள தேசியவாத சிந்தனையால் ஒன்றிணைத்தது. இன உணர்வால் ஒன்றினைந்த மக்கள் மனதில் பௌத்த மத உணர்வையும் கலந்து சிங்கள தேசியவாதத்தை இனத்தாலும் மதத்தாலும் பலப்படுத்திக் கொண்டனர்.

இலங்கையில் தமிழ்த் தேசியச் சிந்தனை | Tamil National Thought In Sri Lanka

இதன் படிநிலை வளர்சியாக தீவிர சிங்களத் தேசியவாத சிந்தனை உருப்பெற்று, தமிழ் இனத்தை அடக்க முற்பட்ட வேளை அத்தீவிர சிங்கள தேசியவாத அடக்கு முறைக்கு எதிராக தமிழ் இனத்தை பாதுகாப்பதற்காக தமிழ்த்தேசியவாத உணர்வு எழுச்சி பெறுகின்றது.

இக் கடந்த கால வரலாற்றில் இருந்து நாம் ஒரு புரிதலை பெற்றுக் கொள்ளலாம். ஆரம்ப காலம் முதல் இத் தீவில் வாழ்ந்த மக்கள் மனதில் இன உணர்வே மேல் ஓங்கி காணப்பட்டது. இன உணர்வு கொண்ட மக்களை ஓர் நிர்வாக கட்மைப்புக்குள் இணைத்த பிரித்தானியர், ஜனநாயக கோட்பாட்டை அறிமுகப்படுத்தி அந்த நிர்வாக கட்டமைப்பபை கொண்ட நிலப்பரப்பிற்கு "இலங்கை" எனும் பெயரையும் சூட்டி விட்டனர்.

இருப்பினும் இத்தீவில் வாழ்ந்த மக்கள் மனதில் இலங்கையர் எனும் இலங்கை தேசிய வாத சிந்தனை வளர்வதற்கு பதிலாக இன ரீதியான தேசிய உணர்வே வளர்ச்சி பெற்றது. அல்லது பிரித்தானியரால் வளர்த்தெடுக்கப்பட்டது எனலாம்.

சுகாதார தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஒத்திவைப்பு

சுகாதார தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஒத்திவைப்பு


அரசியல் கட்டமைப்பாக தமிழ்த்தேசிய சிந்தனை

பிரித்தானியருடைய பரிபூரண ஆதரவுடன் செயற்பட்ட சிங்கள தேசியவாத ஆதிக்க சிந்தனைக்கு எதிராக தமிழ்மக்கள் குரல் கொடுத்த வேளை சலுகை அரசியல் மூலம் தமிழ் தலைமைகளை சிங்கள தலைமைகள் சமாளிக்க முற்பட்டனர்.

பிரித்தானியர் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளின் பார்வையில் அது சலுகை அரசியல் எனின் தமிழ் மக்களின் பார்வையில் அது இணக்க அரசியலாக தோற்றமளித்தது. இருப்பினும் இந்த இணக்க அரசியல் மூலம் தமிழ்மக்கள் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை ஆரம்பத்தில் பட்டறிந்து கொண்டவா் சேர்.பொன்.அருணாச்சலம் தான்.

இலங்கையில் தமிழ்த் தேசியச் சிந்தனை | Tamil National Thought In Sri Lanka

இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட போது எழுத்து மூலம் மேல் மாகாண சட்டசபை பிரதிநிதித்துவம் தமிழர் ஒருவருக்கு வழங்கப்படும் எனக் கூறிய சிங்கள தலைமைகள் தம் வாக்குறுதிகளை மீறி பிரதிநிதித்துவம் வழங்க மறுத்தனர்.

இதனால் இலங்கை தேசிய காங்கிரஸை உருவாக்கிய சேர்.பொன்.அருணாச்சலமே தமிழர்களின் அரசியல் உரிமை போராட்டம் தனி வழியில் பயணிப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து கொண்டார்.

இதனால் இலங்கைத் தேசிய காங்கிரஸில் இருந்து வெளியேறி தமிழர் லீக் என்ற அமைப்பை 1923 ஆம் ஆண்டு உருவாக்கிறார். 'தமிழர் லீக்' அமைப்பின் உருவாக்கம் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் கடந்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் தனிவழியில் பயணிப்பதற்கான அடித்தளமாக அமைந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தமிழர் லீக்கின் ஆரம்பத்துடனே தாயக் கோட்பாடு தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்டுவிட்டது. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தமிழ் மக்களின் வாழ்விடமாகவும் தாயகமாகவும் திகழ்ந்துவந்த வடக்கு கிழக்கு, தமிழர் தாயகமாக பிரகடனம் செய்யப்பட்டது. இதை நாம் இலங்கை தமிழ்த்தேசிய அரசியல் தனி வழியில் பயணிப்பதற்றான ஆரம்பப்புள்ளி எனலாம். 

தென்னிலங்கையில் ஐவர் சுட்டுக்கொலை : கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய ஆதாரம்

தென்னிலங்கையில் ஐவர் சுட்டுக்கொலை : கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய ஆதாரம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Herne, Germany

30 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024