அநுரவும் 6 தமிழ்பேசும் கட்சிகளும்… (தீர்வு )திறந்திடு சீசேம்!
தமிழ் பேசும் 6 அரசியல் கட்சிகளின் அரசியல் பேரவை என்ற புதிய கட்டமைப்பில் உள்ள பிரதிநிதிகள் இன்று சிறிலங்கா அரச தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுடனும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடனும் தனித்தனியாகச் சந்திப்புகளை நடத்தி முடித்துவிட்டன.
நாளை இதே குழு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடனும் சந்தோஷமாகச் சந்தித்துப் பேசவுள்ளன.
இந்திய ஆசீர்வCartத்துடன் கடந்த மாதத்தில் இந்தத் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் தளம் உருவானதாகக் கருதப்படும் நிலையில், அநுரவுடனும் சஜித்திடமும் இன்று என்ன பேசினோம் என்பதை நாளை இவர்கள் கொழும்பில் உள்ள இந்தியா ஹவுஸுக்கும் அப்டேட் செய்வது, முன்னர் ஒவ்வொரு முறை இலங்கைப்பயணத்தின் பின்னரும் டெல்லிக்கு அறிக்கையிட்ட எரிக் சொல்ஹெய்ம் பாணியை நினைவூட்டுகிறது.
எனினும், இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் பழைய பல்லவி முறையீடுகளும் அதற்குரிய "ஆகட்டும் பார்க்கலாம்" பதில்களும்தான் வந்துள்ளன.
அநுர ஆட்சிப் பொறுப்பேற்ற சிறிலங்காவுக்கு இப்போது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை ஒரு தேசியப் பிரச்சினை என்ற அளவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
மாறாக, நீர்கொழும்பு, மஹர சிறைக் கலவரங்களின் வரிசையில் அடுத்து எந்தச் சிறை குழம்பும் என்ற கவலை உள்ள நிலையில், சமகால இலங்கை விடயங்களை மையப்படுத்தி வருகின்றது ஐபிசி தமிழின் செய்தி வீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |