மாகாணசபை அதிகாரம் தமிழ் மக்களுக்கு அவசியம் - சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து
tamil people
Suresh Premachandran
power
By Vanan
தமிழ் மக்களின் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கும், காணி அபகரிப்பை தடுக்கவும் மாகாணசபை அதிகாரம் என்பது தமிழ் மக்களுக்குத் தேவை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்(Suresh Premachandran) குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, நாடாளுமன்ற தேர்தல் அளவிற்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பது பாரிய சந்தேகமே என தெரிவித்துள்ள அவர்,
தமிழ் மக்கள் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகளை முறையாக மேற்கோள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.