தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அவசியம் - இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவிப்பு
jaffna
tamil-political-prison
sisira jeyakkodi
By Vanan
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானதென இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணம் நாகவிகாரையில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர், பொசன் தினத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு பதில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கிலுள்ள இளைஞர்கள் பலர் சிறைகளில் உள்ளனர். ஆகவே அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது.
பல்லின மக்கள் வாழும் நாட்டில் இதனை மேற்கொள்ளும் போதே இனங்களிடையே நல்லிணக்கம் ஏற்படும் என்றார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி