தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்! ஐ.நாவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்
தியாகதீபம் திலீபனை நினைவேந்தும் தமிழ் மக்களின் உரிமையை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைதியான நினைவேந்தல் நடவடிக்கைகள் கருத்து வெளிப்பாடு மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திலீபனின் நினைவாலயத்திலிருந்து அவரது திருவுருவச்சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறும், தமிழ் மக்கள் அச்சுறுத்தல் மற்றும் தேவையற்ற தலையீடுகள் இன்றி தமது வரலாற்றையும் இறந்தவர்களையும் அமைதியாக நினைவேந்துவதற்கான சூழலை உறுதிப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
மேலும், அகற்றப்பட்ட திருவுருவச்சிலையை மீள நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறும் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |