இமயமலைப் பிரகடனத்தை எதிர்க்கும் சிங்கள தரப்பினர்
உலகத் தமிழர் பேரவை (GTF) மற்றும் அமரபுர நிக்காயவின் அனுநாயக்க தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்கள் குழு தொகுத்த "இமயமலைப் பிரகடனம்" என்ற ஆவணம் இலங்கை அமரபுர மகா சங்க சபையின் கருத்து அல்லவென அந்த சங்க சபையின் உதவிப் பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் டிசம்பர் 8ஆம் திகதி, உலகத் தமிழர் பேரவை மற்றும் பௌத்த பிக்குகளை ரணில் விக்ரமசிங்க சந்தித்திருந்தார்.
இலங்கைக்கான சங்க அமைப்பைப் பிரதிநிதித்தவப்படுத்தி, அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட தேரர்கள் இணைந்து உருவாக்கிய “இமயமலைப் பிரகடனத்திற்கு” உற்சாக வரவேற்பு அளித்தார்.
இமயமலைப் பிரகடனம்
இந்நிலையில், மகாநாயக்க தேரர்கள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக எனக் குறிப்பிட்டு, டிசம்பர் 30, 2023 அன்று, இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உதவிப் பதிவாளர் அம்பலன்கொட சுமேதானந்த தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இமயமலைப் பிரகடனம் இலங்கை அமரபுர மகா சங்க சபையால் அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இமயமலைப் பிரகடனம் தொடர்பாக இலங்கை அமரபுர மகா சங்கத்தில் எந்த உடன்பாடோ அல்லது விவாதமோ இடம்பெறவில்லை.
புலம்பெயர் தமிழ் அமைப்புகள்
அது ஒரு சில தேரர்களின் தனிப்பட்ட கருத்தின் வெளிப்பாடு மாத்திரமே என இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது என அமரபுர மகா சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இமயமலை பிரகடனம் என்ற ஆவணம் ஏற்கனவே இலங்கைத் தமிழர்களாலும் பல புலம்பெயர் தமிழ் குழுக்களாலும் கடுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.