வேலன் சுவாமிகளின் கைது - ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு கண்டனம்
யாழ். நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் சிறிலங்கா அதிபர் கலந்துகொண்ட போது நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு தமது கண்டணத்தை பதிவு செய்துள்ளது.
தமது டுவிட்டர் தளத்தில் இது குறித்த கண்டனத்தை பகிர்ந்துள்ளனர்.
வன்மையான கண்டனம்

சர்வாதிகார ஆட்சி ஒரு நாட்டை நடத்துவதற்கும், சர்வதேசத்தின் உதவியைக் கேட்பதற்கும் வழியாக அமையாது எனவும் இலங்கையில் மனித உரிமைகள் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.