ஆசிரியர் அடித்ததால் கேட்கும் திறனை இழந்த மாணவன் - நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
srilanka
teacher
s day
school court
By Vasanth
உடல் ரீதியான தண்டனை காரணமாக கேட்கும் திறனை இழந்த மாணவனுக்கு அரசாங்கமும் ஆசிரியரும் ரூபா 6,50000 ஐ வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசாங்கம் ரூபா ஐந்து இலட்சத்தையும் மாணவனை அடித்த ஆசிரியர் ரூபா 1,50000 த்தையும் வழங்கவேண்டுமென உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு மாத்தறையில் உள்ள பாடசாலையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பில் மாணவனின் பெற்றோர் ஆசிரியருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.
ஆசிரியர் அடித்தமையால் மாணவன் கேட்கும் திறனை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இழப்பீட்டை 06 மாத காலத்துக்குள் செலுத்த வேண்டுமெனவும் அரசாங்கம் மற்றும் ஆசிரியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.