NPP தலையீடா..! வட மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு

Ministry of Education Ceylon Teachers Service Union Education Teachers schools
By Thulsi Oct 13, 2025 03:40 AM GMT
Report

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடுமையான கவலை வெளியிட்டுள்ளது.

இச்சங்கத்தின் உப செயலாளர் காரளசிங்கம் பிரகாஷ், நேற்று (12) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இறுதியாக வடமாகாண கல்வித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட இடமாற்றப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்கள், உரிய நிர்வாக நடைமுறைக்கேற்ப தங்களுடைய மேன்முறையீடுகளை அதிபர் ஊடாக வலயம் அல்லது மாகாண கல்வி திணைக்களத்திற்கு சமர்ப்பித்து தீர்வினைப் பெற முடியும்.

நாடகமாடும் அநுர அரசு - யாழில் விடுவிக்கப்பட்ட காணிகளை அபகரிக்க முயற்சி

நாடகமாடும் அநுர அரசு - யாழில் விடுவிக்கப்பட்ட காணிகளை அபகரிக்க முயற்சி

கடும் விமர்சனங்கள்

ஆசிரியர்களுக்கான நியாயங்களைப் பெற்றுத்தர இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எப்போதும் முன்நின்று செயற்படும். அதேவேளை, இடமாற்ற சபையில் இடம்பெற்ற சில நடவடிக்கைகள் குறித்து அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

NPP தலையீடா..! வட மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு | Teachers Transfer Issues Moe Ministry Of Education

தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்புடைய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய பதவியாளர் ஒருவர் தனது சகோதரிக்காக தன்னிச்சையாகச் செயல்பட்டு, பொய்யான கருத்துகளைப் பரப்பி ஆசிரியர்களை தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளார்.

இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறான செயல்கள் வடமாகாண கல்வியை சீரழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும், கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையை பாதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர் பெறும் தவெக: இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு - அச்சத்தில் தமிழக அரசு

உயிர் பெறும் தவெக: இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு - அச்சத்தில் தமிழக அரசு

சுயநல அரசியல் செயற்பாடு

அத்தோடு, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் மேற்படி சகோதரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்து, முரண்பட்ட நிலையில் இடமாற்ற சபையிலிருந்து வெளிநடப்பு செய்தது கவலைக்குரிய விடயமாகும்.

NPP தலையீடா..! வட மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு | Teachers Transfer Issues Moe Ministry Of Education

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை விட குடும்ப நலனை முன்னிலைப்படுத்தும் இவ்வாறான சுயநல நடவடிக்கைகளை எங்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே, வடமாகாண ஆசிரியர்கள் தங்களுக்கான நியாயங்களை உரிய வழிமுறையில் பெற்றுக்கொள்ளவும், சுயநல அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவாகச் செல்லாமல் விழிப்புடன் செயற்படவும் என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் வலிகாமம் வலய செயலாளர் ப.கஜமுகன், யாழ்.வலய செயலாளர் க.பரமேஸ்வரன், தென்மராட்சி வலய செயலாளர் இ.சிவானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

சங்குப்பிட்டி பாலத்தில் மீட்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம்

சங்குப்பிட்டி பாலத்தில் மீட்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025