ஈரானில் கொடூரம் : பிரசவத்திற்கு பின்னர் கணவனால் அடித்துக்கொல்லப்பட்ட 14 வயதான சிறுமி
பிரசவம் இடம்பெற்று 20 நாட்களின் பின்னர் 14 வயது சிறுமி ஒருவர் தனது கணவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள கொடூர சம்பவம் ஈரானில் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர் சோகந்த் மொஷ்டராகி (Sogand Moshtareki) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 06 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.சோகந்திற்கு 13 வயதாக இருந்தபோதே கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
குடும்பத்தினரைப் பார்க்க அனுமதி கேட்டதால் நடந்த விபரீதம்
பிரசவத்திற்குப் பிறகு தனது குடும்பத்தினரைப் பார்க்க அனுமதி கேட்டதால், 14 வயது சிறுமியை அவரது கணவர் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெர்மான் மாகாணத்தைச் சேர்ந்த சோகந்த், பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கார் விபத்தில் சிக்கினார், ஆனால் அவர் விபத்தில் இருந்து உயிர் தப்பி, குழந்தையைப் பாதுகாப்பாகப் பிரசவித்தார்.

சோகந்தின் கணவர், அவரை அவரது குடும்பத்தினரிடமிருந்து பிரித்து, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது பூட்டி வைத்ததாகத் தெரியவந்துள்ளது.
ஈரானில் உள்ள கட்டாயத் திருமண முறையின் கொடிய விளைவுகளை இந்தச் சம்பவம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது என ஈரானிய மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |