தென் கொரிய விபத்தில் பலியான இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்!
தென் கொரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களின் அடையாளங்களை சியோல் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் உயிரிழந்தவர்களின் சடலங்களை விரைவில் இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ரன்வல, கொடகவெல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய தெஹிபிட்டிய விதானலாகே அனில் குமார விஜேரத்ன மற்றும் வலப்பனை - ஹல்கரனோயா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மகேஸ்வரன் பிரசாந்தன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கைத் தூதரகம் அறிவிப்பு
குறித்த விபத்து மற்றும் மரணங்கள் தொடர்பாக 'ஹ்வாசியோங் சியோபு' (Hwaseong Seobu) காவல் நிலையத்தினால் சியோலிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு நேற்று (27) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகன விபத்து நேற்று முன்தினம் (26) இரவு ஜங்கான் - மியோன் பகுதியில் இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |