நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பதற்றம்
இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகில் தொழில் கோரும் பட்டதாரி குழுவினருக்கும் காவல்துறைக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் (Polduwa Junction) இன்று (21) வேலையற்ற பட்டதாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளையிலே இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலுக்குள் நுழைய முயன்றபோது காவல்துறையினர் அதனை தடுத்த போது அமைதியின்மை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் உத்தரவு
மேலும் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட வேளை சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் போராட்டம் நடத்தக் கூடாது என அண்மையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று (21) வரை சத்தியாக்கிரகம் மற்றும் போராட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்த போராட்டக் குழுவினருக்கு எதிராக நீதிமன்றம் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.
ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பங்கேற்பாளர்களுக்கு இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்