அமெரிக்க பத்திரிகையாளரை கடத்தி கொன்ற பயங்கரவாதியும் சிந்தூர் தாக்குதலில் பலி
2002 ஆம் ஆண்டு அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பேர்லை கடத்தி கொலை செய்த பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவரான அப்துல் ரவூப் அசார், ஒபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத இலக்குகள் மீது இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதல்களை 7 ஆம் திகதி காலை நடத்தியபோது, அப்துல் ரவூஃப் கட்டிடத்தில் இருந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கடத்தப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் தலை துண்டித்து படுகொலை
ஜனவரி 23, 2002 அன்று, அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட்ஜேர்னலின் தெற்காசியப் பணியகத் தலைவரான டேனியல் பேர்ல், பாகிஸ்தானில் உள்ள ஒரு மதத் தலைவரை நேர்காணல் செய்யச் சென்றபோது கராச்சியில் கடத்தப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு அவரது தலை துண்டிக்கப்படுவதைக் காட்டும் காணொளி வெளியிடப்பட்டது.
