அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்: சவாலுக்கு உட்படுத்தி இதுவரை 10 மனுக்கள்
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவின் ஒரு பகுதியாக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி 10 விஷேட மனுக்கள் வியாக்கியாணம் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுடிருந்தன.
இந்த மனுக்கள் (19.08.2026) மாலையாகும் போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றை சவாலுக்கு உட்படுத்தி மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான 14 நாள் கால அவகாசம் கடந்த செவ்வாய்க்கிழமை (18.08.2026) ஆரம்பமானது.
22 ஆவது திருத்த சட்டமூலம்
சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் 22ஆவது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டது.

சங்கத்தின் பொருளாளர் டி.எம்.எஸ். பசிந்து சில்வா மற்றும் உதவிச் செயலாளர் இணைந்து அந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ப்ரீ லோயர்ஸ் அமைப்பின் தலைவர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சர்வஜன பலய, சமகி ஜன பலவேகய, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் சாந்த ஜயதிலக உள்ளிட்டோரும் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
பின்னர் புதன்கிழமை (19) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, பாக்கியசோதி சரவணமுத்து, துமிந்த நாகமுவ, மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரும் விஷேட மனுக்கலை தாக்கல்ச் செய்துள்ளனர்.
இந்த மனுக்களில் அரசியலமைப்பின் 134 (1)ஆம் உறுப்புரை பிரகாரம் சட்டமா அதிபர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.
முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அதனை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாகவும் மட்டுமே இயற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் வியாக்கியாணம் அளிக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4