தப்பிச் சென்ற கொரோனா நோயாளி பிடிபட்டார்!
Corona
police
People
Arrest
Ajith Rohana
By Chanakyan
கொழும்பு கொள்ளுபிட்டி பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலையொன்றில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் பிடிபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட பின்னர், கடந்த 25 ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த கொரொனா தொற்றாளரை கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்