தேசிய தலைவரின் அடையாளம் தமிழரசுக் கட்சி : பிமல் கருத்துக்கு சிறீதரன் பதிலடி
இலங்கைத் தமிழரசுக் கட்சி (Ilankai Tamil Arasu Kachchi) தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake), நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை மீளப் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan ) வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (09.05.2025) இடம்பெற்ற தனிநபர் பிரேரணைகள் தொடர்பான விவாதத்தில் வைத்தே நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இதனை தெரிவித்திருந்தார்.
மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கசிப்பை வழங்கி வெற்றியீட்டியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி
இந்த பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன், அமைச்சர் அதனை மீள பெற வேண்டும்.
ஒருபோதும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காது . இதேவேளை பணம் வழங்கி வாக்குகளைப் பெற்ற தரப்பினரும் நாங்கள் இல்லை.
1940 ஆண்டு காலப்பகுதியில் தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ் மக்களின் தேசிய தலைவர் பிரபகரனால் ஒரு அடையாளமாக தரப்பட்ட கட்சி தான் இலங்கை தமிழரசு கட்சி.
தமிழரசு கட்சி எப்போதும் மதுபானத்தை வாங்கி கொடுப்பதோ அல்லது மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கிய கட்சி கிடையாது.
தமிழ் தேசியத்தின் இருப்பை, தமிழ் தேசியத்தின் அடையாளம், தமிழ் மக்கள் இழந்து போன இறைமையை மீட்டெடுக்க போராடும் ஒரு கட்சி தமிழரசுக் கட்சி.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
