குடும்பிமலையில் மீட்கப்பட்ட கார்ல் குஸ்டாஃப்: கடல் புலிகளின் அபூர்வ கடற்படை ஆயுதம்

Batticaloa Sri Lanka Eastern Province
By Dharu Feb 09, 2026 08:38 AM GMT
Report

மட்டக்களப்பு - குடும்பிமலை பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்ட ரொக்கெட் லோஞ்சர்கள் தொடர்பில் இலங்கை கடற்படையின் முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவரான ஓய்வுபெற்ற அட்மிரல் ரவீந்திர சி. விஜேகுணரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செய்தியில், “ நன்றாக பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்த 84 மி.மீ. கார்ல் குஸ்டாஃப்(Carl Gustaf) ரீகாய்லெஸ் ரொக்கெட் லோஞ்சர்கள்” எனவும் குறித்த ஆயுதங்களை அவர் அடிகோடிட்டு காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு நீதிமன்றின் உத்தரவு

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு நீதிமன்றின் உத்தரவு

ஆபத்தான அயுதங்கள்

இன்று நான் வாசித்த ஒரு செய்திக் கட்டுரையின் படி, இலங்கை காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை (Special Task Force – STF), இராணுவ புலனாய்வு உதவியுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலை பகுதியில் புதைக்கப்பட்டு நன்றாக பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்த 84 மி.மீ. கார்ல் குஸ்டாஃப்(Carl Gustaf) ரீகாய்லெஸ் ரொக்கெட் லோஞ்சர்கள் மூன்றை மீட்டுள்ளது.

குடும்பிமலையில் மீட்கப்பட்ட கார்ல் குஸ்டாஃப்: கடல் புலிகளின் அபூர்வ கடற்படை ஆயுதம் | The Rare Naval Weapon Of The Sea Tigers

இவை முன்பு விடுதலைப் புலிகளால் (LTTE) பயன்படுத்தப்பட்டவை. இந்த ஆபத்தான அயுதங்கள் 1990-களில் இலங்கை கடற்படையின் கப்பல்கள் மற்றும் சிறிய கடற்படை craft களை எதிர்த்து நடைபெற்ற கடற்போரில், விடுதலைப்புலிகளின் கடல் புலி (Sea Tiger) பிரிவால் பயன்படுத்தப்பட்டன.

இது தொடர்பில் முதல் பதிவான சம்பவம் 1997 பெப்ரவரி மாதத்தில், மன்னார் வளைகுடாவில் உள்ள இரணைத்தீவு (Iranativu) அருகே இடம்பெற்றது.

அட்மிரல் சிசில் திஸ்ஸேரா 27 ஜனவரி 1997 அன்று, அட்மிரல் மோகன் சமரசேகராவிடமிருந்த இலங்கை கடற்படையின் தளபதியாக பொறுப்பேற்றார்.

1996 முதல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தீவிரமடைந்தது. இலங்கை கடற்படை (SLN) தன் வேகத் தாக்குதல் படகுகள் (Fast Attack Craft – FAC) அணியை மிகச் செயல்திறனுடன் பயன்படுத்தியது.

வார்த்தையை விட்டு சிக்கிய விமல் வீரவன்ச! நலிந்த வைத்த செக்

வார்த்தையை விட்டு சிக்கிய விமல் வீரவன்ச! நலிந்த வைத்த செக்

புலிகளின் கடற்கரை போர் திறன்

இந்த FAC அணி கடற்படையின் முன்னணிப் படையாக இருந்து. விடுதலைப் புலிகளின் கடற்கரை போர் திறன்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகித்தது.

குடும்பிமலையில் மீட்கப்பட்ட கார்ல் குஸ்டாஃப்: கடல் புலிகளின் அபூர்வ கடற்படை ஆயுதம் | The Rare Naval Weapon Of The Sea Tigers

முல்லைத்தீவு, பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை (Velvettithurai) கடற்பகுதிகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கடல் புலி படகுகளுடன் அடிக்கடி மோதல்கள் நடைபெற்றன.

பெரும்பாலான கடற்போர்களில் இலங்கை கடற்படை வெற்றி பெற்றது. எனினும், சில சம்பவங்களில் இலங்கை கடற்படை தனது சில FAC படகுகளை இழந்தது.

புலனாய்வு அறிக்கைகளில், அலுமினிய உடலமைப்புடைய FAC படகுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் புதிய ரீகாய்லெஸ் ரொக்கெட் லோஞ்சர்களை பயன்படுத்துவதாக உறுதிப்படுத்தின.

இவை நெருக்கமான கடற்போரில் மிகப் பேரழிவை ஏற்படுத்தக்கூடியவையாக இருந்தன. ஆனால் ஆரம்பத்தில் அந்த ஆயுதத்தின் சரியான வகை வெளிப்படுத்தப்படவில்லை.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள 1997 பெப்ரவரி சம்பவம், பயன்படுத்தப்பட்ட ஆயுதம் 84 மி.மீ. கார்ல் குஸ்டாஃப் ரீகாய்லெஸ் கன் என்பதைக் உறுதிப்படுத்தியது.

திகதி: 9 பெப்ரவரி 1997, காலை 06.00 மணி

இடம்: இரணைத்தீவு அருகே FAC கள்: – P 460 (இஸ்ரேல் தயாரிப்பு),

கட்டளை: கமாண்டர் மனோஜ் ஜயசூரிய – P 452 (CDL தயாரிப்பு), தற்காலிக கட்டளை: லெப்டினன்ட் கமாண்டர் பி. எம். விக்ரமசிங்க (நிரந்தர OIC: லெப்டினன்ட் கமாண்டர் என். ஹீனத்திகல)

தளம்: KKS (காங்கேசன்துறை) இலிருந்து செயல்பட்டது.

சபாநாயகருக்கு எதிராக வெடித்த சர்ச்சை! தொடங்கியது விசாரணை

சபாநாயகருக்கு எதிராக வெடித்த சர்ச்சை! தொடங்கியது விசாரணை

தாக்குதல் 

இந்த FAC கள், நான்கு 250 HP அவுட்போர்ட் இயந்திரங்கள் கொண்ட விடுதலைப் புலிகளின் தாக்குதல் படகொன்றால் எதிர்கொள்ளப்பட்டன.

குடும்பிமலையில் மீட்கப்பட்ட கார்ல் குஸ்டாஃப்: கடல் புலிகளின் அபூர்வ கடற்படை ஆயுதம் | The Rare Naval Weapon Of The Sea Tigers

அந்த இலக்கு அழிக்கப்பட்டது, மேலும் ஒரு விடுதலைப் புலிகள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். மோதலின் போது, FACயின் மூத்த கடல் இயந்திர தொழில்நுட்ப நிபுணர் (Marine Engineering Mechanic), எதிரி படகு சுட்டு விட்ட ஒரு ப்ராஜெக்டைலை (projectile) எடுத்துக்கொண்டு வந்தார்.

அந்த ப்ராஜெக்டைல் FACயின் உடலை துளைத்து, OICயின் கேபினுக்குள் (இரண்டு படுக்கைகளுக்கு நடுவே) புகுந்து, உதவி இயந்திர அறை (auxiliary engine-room) கதவை மோதி, வெடிக்காமல் தரையில் விழுந்தது.

அந்த கதவு கடுமையாக சேதமடைந்ததால் FACயின் நீர்ப்புகா தன்மை (watertight integrity) பாதிக்கப்பட்டது. FACகள் மீண்டும் காங்கேசன்துறைக்கு திரும்பியபின், அந்த ப்ராஜெக்டைல் கடற்படை ஆயுத நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணைகளில், எதிர் தரப்பு பயன்படுத்திய ஆயுதம் 84 மி.மீ. கார்ல் குஸ்டாஃப் தோளில் ஏந்திச் சுடும் ரீகாய்லெஸ் ஆயுதம் என்றும், அந்த ப்ராஜெக்டைல் ஒரு மில்லியன் மெழுகுவர்த்தி சக்தி கொண்ட ஒளி (illuminator) அளவு என்றும் தெரியவந்தது.

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்...!

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்...!

மூன்று ஆயுதங்களின் தொகுதி

ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் safety pin-ஐ அகற்றாததால், அந்த ஆயுதம் செயல்படவில்லை. கார்ல் குஸ்டாஃப் 84 மி.மீ. ரீகாய்லெஸ் ஆயுதம், இதை முதலில் தயாரித்த Carl Gustafs Stads Gevärsfaktori நிறுவனத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

இது 1940-களின் இரண்டாம் பாதியில், ஸ்வீடனின் ரோயல் ஸ்வீடிஷ் ஆர்மி மேட்டீரியல் நிர்வாகத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.

இது ஒரு குழுவால் இயக்கக்கூடிய, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய காலாட் படை ஆதரவு ஆயுதமாக உருவாக்கப்பட்டு, குறுகிய தூரத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்கு கவச வாகன எதிர்ப்பு, மனிதவள எதிர்ப்பு, போர்க்கள ஒளியூட்டல், புகை மறைப்பு மற்றும் இலக்கு குறித்தல் போன்றவற்றிற்கு யன்படுத்தப்படுகின்றது.

கடற்படையில் மிகுந்த முன்னேற்றம் பெற்ற SLN FAC களுக்கு எதிராக, நெருக்கமான கடற்போரில் இவ்வாயுதங்களை பயன்படுத்தியது.

விடுதலைப் புலிகளின் கடல் புலி பிரிவின் முக்கியமான புதுமை மற்றும் தந்திரமான மாற்றமாக இது அறியப்பட்டது.

வரலாற்று தகவலின்படி, இறுதி ஈழப்போரின் போது, உலகில் ஒரே ஒரு அரசல்லாத அமைப்பு மட்டுமே இந்த கார்ல் குஸ்டாஃப் தோளில் ஏந்திச் சுடும் ரீகாய்லெஸ் ஆயுதத்தை பயன்படுத்தியது.

அது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஆகும். இந்நிலையில் சமீபத்தில் மீட்கப்பட்ட இந்த மூன்று ஆயுதங்களின் தொகுதி (batch) எண்களை ஆய்வு செய்வது மிக முக்கியமானது.

அவை எங்கு தயாரிக்கப்பட்டன, எவ்வாறு மட்டக்களப்பு, இலங்கை வரை கொண்டு வரப்பட்டன என்பதைக் கண்டறிவது அவசியம். ” என ரவீந்திர சி. விஜேகுணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025