எரிவாயு சிலிண்டரில் மோசடி செய்த பெண்! டிக்கோயாவில் நடந்தேறிய சம்பவம்
SriLanka
Hotton
Litro Gas
Laugh Gas
By Chanakyan
ஹட்டன் – டிக்கோயா நகரில் சமையல் எரிவாயு சிலிண்டரின் நிறத்தை மாற்றி, மோசடியில் பெண்ணொருவர் ஈடுபட்டுள்ளதாக டிக்கோயா நகர எரிவாயு சிலிண்டர் முகவர் தெரிவித்துள்ளார்.
மஞ்சள் நிறத்திலான லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நீல நிறத்திலான சாயத்தை பூசி லிட்ரோ எரிவாயு சிலிண்டர் போல மாற்றியுள்ளார்.
பின்னர் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விற்பனை முகவரிடம் அதனை வழங்கி, அவரிடமிருந்து லிட்ரோ எரிவாயு சிலிண்டரொன்றை குறித்த பெண் கொள்வனவு செய்துக்கொண்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி