அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் பருத்தித்துறை ஓடக்கரையில் பலருக்கு தொற்று
covid
antigen test
pointpedro
oodakarai
By Sumithiran
பருத்தித்துறை ஓடக்கரை பகுதியில் 37 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் இன்று வியாழக்கிழமை ஓடக்கரைக் கிராமத்தில் 37 பேரிடம் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
அவர்களில் 15 பேருக்கு கொவிட் -19 நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஓடக்கரைக் கிராமத்தில் அண்மைய நாள்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் இந்த சிறப்பு பரிசோதனை அங்கு இன்று முன்னெடுக்கப்பட்டது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்