திருமலையில் தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்
Tamils
Trincomalee
By Independent Writer
தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவு தினத்தின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைமையில் மாநகர சபை மண்டபத்தில் இன்று (26) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பிரதான சுடரேற்றப்பட்ட பின்னர் தியாக தீபம் திலீபனின் திரு உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விளக்கேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவஞ்சலி செலுத்தினர்
இவ் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.

சிவன் கோவிலுக்கு முன்பாக தொடர்ச்சியாக 12 நாட்கள் இடம்பெற்று வந்த அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து இன்றைய தினம் (26) இறுதி நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |