வவுனியாவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தியாகி திலீபனின் நினைவேந்தல்!
தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாநகரசபை வாயிலுக்கு அருகில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபி வளாகத்தில் இன்று (26) இந்ந இந்நிகழ்வு இடம்பெற்றது.
போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
அஞ்சலி செலுத்தினார்கள்
இதன்போது, ஈகைச் சுடரேற்றப்பட்டதைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலரஞ்சலியும் அகவணக்கமும் செலுத்தப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள், போராளிகள் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |