தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்..! அனைத்து தமிழ் உறவுகளுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பு

Sri Lankan Tamils Tamils Jaffna Northern Province of Sri Lanka
By Kanna 2 வாரங்கள் முன்

தியாக தீபம் திலீபனுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாநோன்பு இருந்து எங்களுடைய வீர வணக்கத்தையும் அஞ்சலியையும் அனைத்து தமிழ் உறவுகளும் செய்ய வேண்டும் என தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்புக்கும் அரசியல் கட்சிகளுடைய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் நடைபெற்றது.

இதன் பின்னர் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினர் கூட்டாக ஊடக சந்திப்பை நடாத்தி இந்த கோரிக்கையை விடுத்தனர்.

எட்டப்பட்ட தீர்மானங்கள்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்..! அனைத்து தமிழ் உறவுகளுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பு | Thileepan Remembrance Day In Jaffna Nallur 2022

ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தவத்திரு வேலன் சுவாமிகள், " சுயாதீனமாக உருவாக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு சுயாதீனமாகவும் வெளிப்படுத்தன்மையோடும் இயங்கிவருகின்றது. எங்களை யாரும் அணுகி தங்களுடைய ஆலோசனைகள் கருத்துக்களை முன்வைக்கலாம்.

இதனடிப்படையில் தமிழ் தேசிய பரப்பில் இருக்கின்ற கட்சிகளுடைய தலைவர்கள், பிரதிநிதிகள் உடனான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது சில தீர்மானங்கள் எட்டப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை உண்ணாநோன்பு இருந்து எங்களுடைய வீர வணக்கத்தையும் அஞ்சலியையும் தியாக தீபம் திலீபனுக்கு அனைத்து தமிழ் உறவுகளும் செய்ய வேண்டும்.

தியாக தீபம் திலீபன் இன்னுயிரை ஈந்த இந்த நல்லூர் பூமியிலே அவருடைய நினைவாலயம் அமைந்திருக்கின்ற இடத்திலே உண்ணாவிரதம் நடைபெற இருக்கின்றது.

எந்த கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் இருந்தாரோ, பார்த்திபன் இன்னமும் பசியோடு தான் இருக்கின்றார் என்ற வாக்கியத்துக்கமைய இன்றும் அதே பிரச்சனைகளை ஒவ்வொரு வடிவங்களிலே எதிர்கொண்டிருக்கின்றோம். அவற்றுக்கான நிரந்தர தீர்வு வேண்டியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டியும் உண்ணா நோன்பை இருக்க தீர்மானித்திருக்கின்றோம்.

இந்த சந்தர்பப்த்தில் பெருமளவானோர் பங்குபற்ற வேண்டுமென்று இந்த சந்தர்ப்பத்தில் அறைகூவல் விடுக்கின்றோம். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்ற வாக்கியத்துக்கமைய மக்களுடைய புரட்சி எழுச்சியாக அமைய வேண்டும்.

ஊர்தி பவனி

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்..! அனைத்து தமிழ் உறவுகளுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பு | Thileepan Remembrance Day In Jaffna Nallur 2022

தியாக தீபம் திலீபனுடைய நினைவு நாளான செப்டம்பர் 26ம் திகதி திங்கட்கிழமை தமிழர் தாயகத்தின் பல பாகங்களில் இருந்தும் ஊர்திகள் பவனி வர இருக்கின்றன. அனைத்து ஊர்திகளும் காலை 10 மணிக்கு முன்பதாக நல்லூர் தியாக தீபம் திலீபனுடைய நினைவாலயத்தை வந்தடையும்.

தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த 10.48 மணிக்கு மலரஞ்சலி இடம்பெறவிருக்கின்றது. இதன்போதும் மக்கள் பெரும் எழுச்சியாக வரவேண்டும்.

வாகன ஊர்திகள், தூக்குகாவடிகளை எங்கள் உறவுகள் காலையில் இருந்து அவற்றை கொண்டுவரலாம். தியாக தீபம் திலீபன் பிறந்த ஊரெழுவிலிருந்து ஊர்தி நல்லூர் நினைவாலயத்தை நோக்கி வந்தடைய இருக்கின்றது.

இந்த ஊர்திகளுடன் இணைந்து பயணித்துக் கொண்டு பொதுமக்கள் வரவேண்டும் என தியாக தீபம் திலீபனுடைய நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு சார்பில் இந்த அழைப்பை விடுகிறோம்.

தமிழ் தேசியப் பரப்பிலே இருக்கின்ற அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள் மாதர் சங்கங்கள், முச்சக்கர வண்டி சங்கங்கள், மீனவர் சங்கங்கள், விவசாய அமைப்புகள், பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள், கிராம அபிவிருத்தி நிலையங்கள், விளையாட்டு கழகங்கள், இளைஞர் அமைப்புகள் என அனைத்து மக்களும் இவற்றை ஒழுங்கு செய்து ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதத்திலும் அதேபோல திங்கட்கிழமை நடைபெறும் நினைவேந்தல்களிலும் பங்குபற்றி மக்கள் எழுச்சியை காட்ட வேண்டும்.

அனைத்து அமைப்புகளையும் இதற்கு ஒழுங்கு செய்யுமாறு நாங்கள் அன்புரிமையோடு கேட்டுக் கொள்கிறோம் என்றார். ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம், தமிழ் மக்களுடைய ஒட்டுமொத்தமான அபிலாசைகளை ஒன்றிணைந்து ஒரே குடும்பமாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த பொதுக்கட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

ஆகவே இந்த பொதுக்கட்டமைப்பின் நிகழ்ச்சிநிரலுக்கு பூரண ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்க வேண்டும் ", எனக் குறிப்பிட்டார். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

அநுராதபுரம், மாவிட்டபுரம்

10 Oct, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

19 Sep, 2021
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Trimbach, Switzerland

05 Oct, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, உரும்பிராய் கிழக்கு, Whitby, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

நயினாதீவு, நல்லூர், Montreal, Canada

25 Sep, 2022
நன்றி நவிலல்

புளியங்கூடல், Brampton, Canada

07 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Argenteuil, France

07 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

06 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வெள்ளவத்தை

04 Oct, 2022
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, வவுனியா, Brampton, Canada

03 Oct, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

01 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆவரங்கால், Toronto, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், Montreal, Canada

02 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Toronto, Canada

10 Oct, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம்

05 Oct, 2012
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Whitby, Canada

04 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, கரவெட்டி, ஜேர்மனி, Germany

06 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Oct, 2017
மரண அறிவித்தல்

கரவெட்டி, Reading, United Kingdom

26 Sep, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Croydon, United Kingdom

03 Oct, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செல்வபுரம்

03 Oct, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நல்லூர், Toronto, Canada

28 Sep, 2022
மரண அறிவித்தல்

யாழ் இணுவில் மேற்கு, Jaffna, London, United Kingdom

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி

29 Sep, 2022