வவுனியாவில் தியாகதீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல்(படங்கள்)
Tamils
Vavuniya
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Shadhu Shanker
வடக்கு கிழக்கில் தியாகதீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.
நினைவேந்தலின் 11 ஆம் நாளான இன்று (25) நினைவேந்தல் நிகழ்வு வவுனியா தோணிக்கல்லில் இடம்பெற்றது.
குறித்த அஞ்சலி நிகழ்வானது போராளிகள் நலன்புரி சங்க அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

மலர் அஞ்சலி
இதன்போது தியாகதீபம் திலீபனின் உருவப்படத்திற்கு இரு மாவீரரின் தாயான உருத்திரானந்தம் யோகமணியால் முதல் சுடர் ஏற்றி வைக்கப்பட்டிருந்ததுடன், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களினால் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
போராளிகள் நலன்புரி சங்க தலைவர் எஸ் அரவிந்தனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் மற்றும் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.











மரண அறிவித்தல்