யாழில் இருந்து புறப்பட்ட கடற்படை அதிகாரிகளின் இழிசெயல்! அதிரடியாக கைது
பேருந்தில் ஏறிய பின்னர் மதுபோதையில் ஒழுங்கீனமான நடந்து கொண்ட மூன்று கடற்படை அதிகாரிகள் கிளிநொச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றையதினம்(28) சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காங்கேசன்துறை கடற்படை தளத்தில் பணியாற்றும் கடற்படை அதிகாரிகள் விடுப்பில் தங்களின் வீடுகளுக்கு செல்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு செல்லும் இலங்கைப் போக்குவரத்து பேருந்தில் ஏறியுள்ளனர்.
கைது நடவடிக்கை
அதன்போது, பேருந்தில் அவர்கள் ஏனைய பயணிகளுடன் குடி போதையில் ஒழுங்கீனமான நடந்து கொண்ட நிலையை அவதானித்த பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் கிளிநொச்சி காவல்துறையினருக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.

அதனைதொடர்ந்து, குறித்த பேருந்தை மறித்து சோதனையிட்டபோது குடி போதையினால் ஒழுங்கீனமாக நடந்ததை ஏனைய பயணிகள் தெரிவித்த பின்னர், குறித்த மூன்று அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |