மட்டக்களப்பு துறைநீலாவணை படுகொலையின் 36வது நினைவுநாள்
அம்பாறை மாவட்டம் கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.
கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி, நீலாவணை மற்றும் கல்லாறு ஆகிய இராணுவ முகாம்களிலிருந்து புறப்பட்ட இராணுவத்தினர், விவசாயத்தையும் கடற்றொழிலிலையும் பிரதான தொழிலாகக் கொண்ட அமைதிப் பூமியான துறைநீலாவணைக் கிராமத்தைச் சுற்றிவளைத்துக் கொடூரமான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.
அன்றைய தினம் காலை வேளையில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வீடுகளுக்குள் புகுந்தும், வீதிகளால் சென்றவர்கள் மீதும் நிகழ்த்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில், வயது வேறுபாடின்றி அறுபதிற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
36 ஆண்டுகள் நிறைவுதினம்
மேலும், பலர் படுகாயமடைந்து மாற்றுத்திறனாளிகளாக மாறினர்.

சொந்த மண்ணில் உழைத்து வாழ்ந்த மக்கள் கொன்றொழிக்கப்பட்ட இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் (12.08.2026) சரியாக 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |