வாகனம் வாங்கவிருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் அடையாள எண்(TIN) கட்டாயமக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாகனங்களைப் பதிவுசெய்து உரிமையை மாற்றும்போது, வரி செலுத்துவோர் அடையாள எண்ணை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய பதிவு தரவுத்தளம் மற்றும் உரிமை பரிமாற்ற தரவுத்தளத்தில் உள்ளிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 05 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வாகனங்கள்
அதன்படி, மோட்டார் சைக்கிள்கள், கை டிராக்டர்கள், டிராக்டர்கள், டிராக்டர் டிரெய்லர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மேற்படி TIN இலக்கம் தேவைப்படாது என தெரிவிக்கப்படுகிறது.

அவற்றை தவிர ஏனைய அனைத்து புதிய வாகனங்களின் உரிமையையும் பதிவுசெய்து மாற்றும்போது தொடர்புடைய புதிய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வணிகப் பதிவு எண் மற்றும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) தொடர்புடைய தரவுத்தள அமைப்புகளில் உள்ளிடுவது கட்டாயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |