பதிவு செய்யப்படாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பில் வெளியான தகவல்
பதிவு செய்யப்படாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நாட்டில் பணிபுரிய அனுமதிக்கப்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு காலி மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துவதற்கு காலி உதவி மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
அனுமதி மறுப்பு

இந்நிலையில், மாவட்ட செயலக அழைப்புகளில் கலந்து கொள்ளாத அமைப்புகளின் பதிவு இரத்து செய்வது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு அரச சார்பற்ற நிறுவனங்கள் தேசிய செயலகத்திற்கு அறிவிக்க தீர்மானித்துள்ளதாக காலி உதவி மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சிக்கல் நிலைகள் காரணமாக, பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டில் செயற்படுவதற்கு அனுமதியில்லை என பொது பாதுகாப்பு அமைச்சரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 14 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்