இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்
இன்றைய (11.07.2025) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி (Rizvie Salih) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை11.30 முதல் மாலை 5.00 வரை பின்வரும் தனியார் உறுப்பினர்களின் பிரேரணைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
(i) தேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்ப்பினை வழங்குதல் (ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி)
(ii) கிராமிய கூட்டுறவு வங்கிக் கட்டமைப்பை உரிய முறையில் மேற்பார்வை செய்வதற்கான வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல் (ரோஹண பண்டார)
(iii) தேசிய உற்பத்தியில் கால்நடை வளங்கள் துறையின் பங்களிப்பை அதிகரித்தல் (சமிந்த விஜேசிறி)
(iv) ஒவ்வொரு இளைஞரையும் போதுமான வருமானத்தை ஈட்டும் தொழிலைக் கொண்டிருக்கும் ஆளாக அல்லது சுய தொழில்புரியும் தொழில்முனைவோராக மாற்றுதல் (ரவி கருணாநாயக்க)
(v) அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல் (லால் பிரேமநாத)
(vi) பிட்டிகல, உடுகம, நெலுவை மற்றும் தெனியாய ஆகிய நகரங்கள் அமைந்துள்ள சூழல் கட்டமைப்பை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தல் (ரீ.கே. ஜயசுந்தர)
5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
