தலைவரின் பெயரைக்கூறி நாடக அரசியல் : மறைக்கப்படும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த மோகன்
சமகால அரசியலும் அரசியல்வாதிகளும் ஒருவர் பெயரைக்கொண்டு, ஒருவரது புகழின் நிழலில் குளிர்காய்ந்து வருகிறார்கள் என்று தமிழர் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் கலாநிதி மோகன் தெரிவித்திருந்தார்.
கடந்த கால நினைவுமீட்டல்கள் பற்றி பேசுகையில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரான சிவாஜிலிங்கத்தையும் நினைவுகூறி ஓர் விடயத்தை முன்மொழிந்திருந்தார்.
"விடுதலைப் புலிகளின் தலைவன் பிரபாகரனின் பெற்றோர்களில் ஒருவர் உயிரிழந்த வேளையில், அவர்களை பொறுப்பெடுத்து ஈமைக் கிரியைகளை செய்ய முன் வராத பாவம்செய்த அரசியல்வாதிகள் தான் இந்த தமிழ் அரசியல் வாதிகள் என்றார். அந்த வேளையிலே பொறுப்பேற்று அந்தக் கடைமையை செய்து முடித்த சிவாஜிலிங்கம் ஐயாவை பிரபாகரன் துரத்தியடித்ததையும் விலாவாரியாகவே சொன்னார்"
ஆனால் அவர்கள் இன்று பிரபாகரனின் பெயரைக் கூறி அரசியல் செய்யும் நாடகதாரிகளாக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
தமிழர்களுக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த மனித குலமும் ஜனநாயக வாழ்வை வாழ வேண்டும் என்று கூறி உரையாற்றிய, கலாநிதி மோகன் ஐபிசி தமிழின் "நிலவரம்" நிகழ்ச்சியில் அளித்த செவ்வியின் மூலம் முழுமையான அவரின் அரசியல் கருத்தாடல்களை காண்போம்.