தொடரும் சீரற்ற காலநிலை..! அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை எச்சரிக்கை
வானிலை
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன் படி அனுராதபுரம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத்த, குருவிட்ட பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் களு கங்கைக்கு அண்மையில் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
36 மணித்தியாலங்களுக்கான வானிலை
- அனுராதபுரம் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
- மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
- கொழும்பு - அவ்வப்போது மழை பெய்யும்
- காலி - அவ்வப்போது மழை பெய்யும்
- யாழ்ப்பாணம் - அவ்வப்போது மழை பெய்யும்
- கண்டி - அவ்வப்போது மழை பெய்யும்
- நுவரெலியா - அவ்வப்போது மழைபெய்யும்
- இரத்தினபுரி - அவ்வப்போது மழை பெய்யும்
- திருகோணமலை - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
- மன்னார் - அவ்வப்போது மழை பெய்யும்
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தானியங்கி மழை அளவீடுகளின் தரவுகளின் பிரகாரம், இன்று(01) அதிகாலை 05 மணி வரை நாட்டில் அதிக மழைவீழ்ச்சி இரத்தினபுரி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இரத்தினபுரியில் 194.7 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இரத்தினபுரி கிரிமலை பிரதேசம் மற்றும் களுத்துறை பாலிந்தநுவர நகரிலும் 192 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் கொழும்பு மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(01) மாலை வரை நீடிக்கப்படடுள்ளது.
YOU MAY LIKE THIS

