நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம்
Sri Lanka
Department of Meteorology
Climate Change
Weather
By Sathangani
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் (28) மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (28) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
