இன்றும் நாடு முழுவதும் தொடரவுள்ள மழை நிலைமை
வெப்பமண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்குவலயத்தின் தாக்கம் காரணமாக இன்றும் (18) நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டுமாம்! இப்படி கூறுகிறார் வியாழேந்திரன்
பலத்த மழைவீழ்ச்சி
மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்100 மில்லி மீற்றருக்கும்அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மண்சரிவு எச்சரிக்கை
இதேவேளை நாட்டிலுள்ள 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.
நுவரெலியா, பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.