நாளை 12 மணிநேர மின்வெட்டு வெளியான அறிவிப்பு!
நாட்டில் நாளைய தினம் 12 மணிநேர மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை (01) A, B, C, D, E, F ஆகிய பகுதிகளில் அதிகாலை 04 மணி முதல் காலை 6 வரை 2 மணிநேரமும், காலை 8 மணி முதல் மதியம் 12 வரை 4 மணிநேரம், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 6 மணிநேரம், மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
G, H, I, J, K, L ஆகிய பகுதிகளில் காலை 6 - 8 மணி வரை 2 மணிநேரம், மதியம் 12 மணி முதல் - மாலை 4 மணி வரை 4 மணிநேரமும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 6 மணிநேரம் மின்துண்டிப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் P, Q, R, S ஆகிய பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை 2 மணிநேரம், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 4 மணிநேரமும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 6 மணிநேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
