நேபாளத்துடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி ஈட்டிய பாகிஸ்தான்
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி, நேபாள அணிக்கு எதிராக துடுப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் 16 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
முதல் லீக் போட்டி

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், பங்காளதேஷ் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் ஒரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று மாலை 3 மணிக்கு பாகிஸ்தானின் முல்தான் நகரில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.