கடந்த ஆண்டில் இலங்கை சுங்கம் ஈட்டிய மொத்த வருமானம் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
Sri Lanka Customs
By Beulah
இலங்கை சுங்கம் கடந்த வருடம் சாதனை வருமானத்தைப் ஈட்டியுள்ளதாக சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
அதன்படி கடந்த ஆண்டில் இலங்கை சுங்கம் ஈட்டிய மொத்த வருமானம் 970 பில்லியன் ரூபாவாகும்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில், நிதியமைச்சு சுங்கத்துறைக்கு 1,217 பில்லியன் ரூபா வருமான இலக்கை வழங்கியிருந்ததுடன், நாட்டின் பாதகமான நிதி நிலைமையை கருத்திற்கொண்டு அது 893 பில்லியன் ரூபாவாக திருத்தப்பட்டது.
வருமான வளர்ச்சி
அதன்படி, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டில் 138 சதவீத வருமான வளர்ச்சி பதிவாகியுள்ளதாக சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு இலங்கை சுங்கம் 923 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி