இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் : கொட்டும் வருமானம்
இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகளால் 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் $687.5 மில்லியனாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாத வருமானம் $ 345.7 மில்லியன் எனவும் ,இது கடந்டத வருடத்துடன் ஒப்பிடுகையில் 118.2 வீத அகரிப்பாகும். பெப்ரவரி மாத வருவாய் ஜனவரி 2024 உடன் ஒப்பிடும்போது 1.14% அதிகமாகும், இது 2020 க்குப் பிறகு அதிக வருவாயை ஏற்படுத்தியுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கு
இலங்கை சுற்றுலாத்துறையானது இந்த வருடம் 2.3 மில்லியன் பார்வையாளர்களை இலக்காகக் கொண்டுள்ள அதேவேளை 2024 ஆம் ஆண்டில் 4 பில்லியன் டொலர்களை வருமானமாக பெற இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில், 426,603 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு 200,000 சுற்றுலாப் பயணிகளை வரவேற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.
ஹாட்ரிக் சாதனை
பெப்ரவரியின் வருகைகள் டிசம்பரில் பதிவு செய்யப்பட்ட முந்தைய அதிகபட்சமான 210,352 ஐ விஞ்சியது.
மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2014 மற்றும் 2019 க்கு இடையில் மொத்த வெளிநாட்டு நாணய வருமானத்தில் சுமார் 14% சுற்றுலாத்துறை பங்களித்துள்ளது.
எனினும், பல்வேறு சவால்கள் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில் சுற்றுலாத்துறை வருமானத்தில் சுமார் 15 பில்லியன் டொலர் இழப்பை இலங்கை சந்தித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |