இலங்கை வந்த அமெரிக்க சுற்றுலாப்பயணிக்கு ஏற்பட்ட நிலை - உடன் விசாரணைக்கு உத்தரவு
இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக ஐந்து மணி நேரம் கழித்து நாடு திரும்பிய சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) சுற்றுலா அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 07ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வழியாக வந்த ஜோர்ஜ், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.
அதில், இலங்கை வந்ததும் பயணத்தை மேற்கொள்ள போக்குவரத்து பிரச்சினை இருந்தமை மற்றும் தன்னுடன் தொடர்புகொண்ட சுற்றுலாப் பயணநிறுவனத்தை தொடர்புகொள்ள முடியாமற் போனமை போன்ற பிரச்சினைகளை அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அத்துடன் ஒன்லைனில் 'சிக்ஸ் லைன்' என்ற டாக்ஸி சேவையை கூட முன்பதிவு செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கையில் சிக்ஸ் லைன் என்ற டாக்ஸி சேவை இல்லாததால், இந்த சுற்றுலாப் பயணியின் அறிக்கை குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளன.