எப்படி இறந்தனர் சுற்றுலா பயணிகள் :பிரேத பரிசோதனையிலும் துலங்காத மர்மம்
Sri Lanka Tourism
Sri Lanka
Germany
England
By Sumithiran
கொழும்பு(colombo) விடுதியொன்றில் உடல்நிலை சரியில்லாமல் பெப்ரவரி 1 ஆம் திகதி உயிரிழந்த பிரிட்டிஷ்(uk) சுற்றுலாப் பயணி எபோனி மெக்கின்டோஷ்(Ebony McIntosh) (24) மற்றும் ஜேர்மன்(germany) சுற்றுலாப் பயணி நாடின் ரகுஸ் (Nadine Raguse)(26) ஆகியோரின் பிரேத பரிசோதனைகள் நேற்று (10) நடத்தப்பட்டன.
எனினும் பிரேத பரிசோதனையில் இவர்கள் இருவரின் மரணத்திற்கான காரணம் சரியாக தெளிவாகத் தெரியவில்லை, மேலும் விசாரணை நடந்து வருகிறது.
சொந்த நாட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ள சடலங்கள்
மெக்கின்டோஷின் குடும்பத்தினர் மகளின் உடலை இங்கிலாந்துக்கு கொண்டு செல்ல வந்துள்ளனர், அதே நேரத்தில் ரகுஸின் உடல் ஜேர்மனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இவர்களின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் இவர்கள் தங்கியிருந்த விடுதி அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்