ட்ரம்பின் முடிவால் என்றுமில்லா பேரிடியை சந்திக்கப்போகும் அமெரிக்கா!!
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) சில கொள்கை முடிவுகள் காரணமாக அமெரிக்க சுற்றுலாத்துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரம்பின் முடிவுகள், வெளிநாட்டு பயணிகளை ஆத்திரமடைய செய்துள்ளதாகவும், விலைகள் மற்றும் டொலர் மதிப்பு உயரும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு வெளிநாட்டு பயணிகளின் வருகை முன்னர் திட்டமிடப்பட்ட 8.8 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடும்போது, 5.1 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோசமான விளைவு
இந்த நிலையில், அமெரிக்கா மீதான வெளிநாட்டினரின் விரோதத்தினால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அதன் விளைவு இன்னும் மோசமாக இருக்கும் என்றும் அமெரிக்க சுற்றுலா பொருளாதாரத்துறை தலைவர் ஆடம் சாக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் 16 ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் வசிப்பவர்களில், 35 சதவீதம் பேர் ட்ரம்பின் கீழ் அமெரிக்காவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், 22 சதவீதம் பேர் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
$64 பில்லியன் இழப்பு
அத்தோடு, கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கான பயணங்களில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதையும், உள்நாட்டு பயணத்திற்கான தேவையில் சரிவு ஏற்பட்டுள்ளதையும் யுனைடெட் ஏர்லைன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
சுற்றுலா பொருளாதாரத்தின்படி, சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணங்களின் சரிவு காரணமாக அமெரிக்க சுற்றுலாத் துறை 2025 ஆம் ஆண்டில் சுமார் 64 பில்லியன் டொலர் வருவாயை இழக்க நேரிடும் என கூறப்படுகிறது.
மேலும், ரைடர் கோப்பை (2025), ஃபிஃபா உலகக் கோப்பை (2026) மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் 2026 கோடைகால ஒலிம்பிக் போன்ற அமெரிக்கா நடத்தும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளில் குடியேற்றக் கொள்கையை கடுமையாக்குவதன் விளைவுகள் குறித்தும் அமெரிக்க நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்