தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடு : காவல்துறை அறிவிப்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கலனிகம மற்றும் தொடாங்கொட பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அவசரகால பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இன்று (01.05.2026) போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, மாத்தறை நோக்கிச் செல்லும் பாதையின் 17 ஆவது கிலோமீட்டர் முதல் 19ஆவது கிலோமீட்டர் வரை மற்றும் 28ஆவது கிலோமீற்றர் முதல் 30ஆவது கிலோமீற்றர் வரை உள்ள இரண்டு முக்கிய பிரிவுகளில் பழுதுபார்ப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
குறித்த வீதியின் பாதுகாப்பையும் தரநிலையையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த அவசர பணிகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு
இதன்படி பராமரிப்புப் பணிகள் நடைபெறும் காலப்பகுதியில், மாத்தறை நோக்கிச் செல்லும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், மாற்று ஏற்பாடாக கொழும்பு நோக்கிச் செல்லும் இரு பாதைகளும் பிரிக்கப்பட்டு, இருபுற போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால், வழக்கமான போக்குவரத்து ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாலும், விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கிலும், இப்பகுதிகளைக் கடந்து செல்லும் போது வாகன சாரதிகள் மிகவும் கவனமாக வாகனத்தைச் செலுத்துமாறு என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |