சீனாவுக்கு குரங்குகளை வழங்குவதன் பின்னணியில் பாரிய சதித்திட்டம்..!
இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதன் பின்னணியில் கோடிக்கணக்கான கடத்தல் இருப்பதாக சுரக்கிமு சிறிலங்கா தேசிய இயக்கத்தின் பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு ஒரு இலட்சம் குரங்குகளை அனுப்புவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் ஏனைய அமைச்சின் அதிகாரிகளால் எடுக்கப்படும் இவ்வாறான தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இலங்கை மக்கள் இல்லை.
கோடிக்கணக்கான கடத்தல்
உயிரியல் ஆராய்ச்சிக்காக குரங்குகள் இலங்கைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படுவதாக கூறுகின்றனர்.
ஆனால் இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதன் பின்னணியில் கோடிக்கணக்கான கடத்தல் இருக்கின்றது. எனவே இந்த முடிவை மாற்றிக்கொள்ள எதிர்காலத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளோம்.”என தெரிவித்துள்ளார்.