தொடரூந்து விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு ( படங்கள்)
Vavuniya
Sri Lanka Police Investigation
Accident
By Vanan
தொடரூந்து விபத்து
வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இன்று(04) பிற்பகல் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கிச் சென்ற தொடரூந்து வவுனியா செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சம்பவத்தில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ருக்சன் வயது (33) என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக செட்டிகுளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


