ரயில்வே திணைக்கள ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா தொற்று!
vaccine
corona
railway
servant
By Sumithiran
ரயில்வே திணைக்களத்தின் 40 ஊழியர்கள் கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உதவிப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன நேற்று (17 ) தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் சங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும், ரயில்வே தொழிலாளர்களுக்கு உடனடியாக கொவிட் தடுப்பூசி வழங்குமாறு நான்கு முறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்
.
இதனால் ஊழியர்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளதாகவும், பயணிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ள அவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது சுகாதார அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்