சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளருக்கு திடீர் இடமாற்றம்
srilanka
health
colombo
transfer
By Sumithiran
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து டொக்டர் பாலித கருணபேமா நீக்கப்பட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகம் இது தொடர்பில் தெரிவிக்கையில், டொக்டர் கருணபேமா இடமாற்றத்தைப் பெற்றுள்ளதுடன் நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து தனது சேவையை முடித்துக் கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
டொக்டர் பாலிதா கருணபேமா 2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தோன்றியதிலிருந்து சுகாதாரத் துறையில் முக்கிய பங்கு வகித்தார்.
ஒரு சிறப்பு மருத்துவர் என்ற முறையில், கொரோனா வைரஸ் குறித்து அவர் தொடர்ந்து விளக்கங்களை அளித்து, ஆலோசனை வழங்கியதன் மூலம் பொதுமக்களுக்கு வழிகாட்டியதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் மேலும் தெரிவித்தது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்