சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து
Sri Lanka Police
Sri Lanka
By Pavi
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு மற்றும் காவல் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதி காவல்துறை மா அதிபர் அசோக தர்மசேன உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காவல்துறை ஆணைக்குழு இரத்து செய்துள்ளது.
காவல்துறை மா அதிபர் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (01.09.2026) நடைபெற்ற காவல் ஆணைக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் ஆணைக்குழுக் கூட்டம்
காவல் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பணிப்பாளர், இரு காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் பெண் காவல் பரிசோதகர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளின் இடமாற்றங்களும் இதன்போது இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்