விமல், கம்மன்பில உட்பட ஆறு பேருக்கு எதிராக விசாரணை! நீதிமன்றுக்கு அறிவித்தது சிஐடி

CID - Sri Lanka Police Uthaya Gammanpila Wimal Weerawansa Dilith Jayaweera Suresh Salley
By Dhilak Jun 15, 2026 12:06 PM GMT
Report

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் தடுப்புக்காவல் தொடர்பான தற்போதைய விசாரணைகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் மின்னணு ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பாகவே இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அசங்க நவரத்ன மற்றும் சுகீஸ்வர பண்டார, மகிந்த பத்திரண ஆகியோரால் வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கு எதிராக இந்த விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

கடற்படை அதிகாரியின் வாய்ப்பை தட்டிப்பறித்த மகிந்தவின் மகன்! விசாரணைக்கு அழைப்பு

கடற்படை அதிகாரியின் வாய்ப்பை தட்டிப்பறித்த மகிந்தவின் மகன்! விசாரணைக்கு அழைப்பு

அழைப்பாணை 

அதன்படி, இந்த 6 நபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இருப்பினும், சம்பந்தப்பட்ட நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு தற்போது அழைப்பாணை அனுப்ப வேண்டிய அவசியமில்லை என்று நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக 2024-ஆம் ஆண்டின் நீதிமன்ற அவமதிப்பு, நீதித்துறை அதிகாரம் அல்லது நிறுவனச் சட்டம் எண் 8-இன் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், விசாரணைக்குப் பிறகு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு முறைப்பாட்டை தாக்கல் செய்தால் போதுமானது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

2026 உயர் தர பரீட்சையில் குளறுபடி! அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க தயாரான கம்மன்பில

2026 உயர் தர பரீட்சையில் குளறுபடி! அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க தயாரான கம்மன்பில

பசிலுக்கு எதிராக அரசு சாட்சியாக மாறும் நெருங்கிய சகா! நீதிமன்றில் அம்பலமான தகவல்

பசிலுக்கு எதிராக அரசு சாட்சியாக மாறும் நெருங்கிய சகா! நீதிமன்றில் அம்பலமான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி